‘ஆறுமுகன் தொண்டமானின் ஆவணங்களும் கைவசம்’ – அநுர அம்பலம்

அமரர். ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான தகவல்களும் தம்மிடம் இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

” நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின்கீழ் ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ எனும் அமைப்பால் இன்று விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் ஊழல், மோசடிகள் குறித்த தகவல்களை அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தினார்.

இதன்போதே கால்நடை வள அமைச்சு பதவியை அமரர் ஆறுமுகன் தொண்டமான் வகித்தபோது, வாகனங்களுக்கு எரிபொருள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்மை தொடர்பான தகவல்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles