ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள்! முழுமையான அறிக்கையை கோருகிறார் சுகாதார அமைச்சர்!!

உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடி சூழ்நிலையில் எத்தகைய தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 06 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சர் ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மூன்று மாதங்களென ஆறு மாதங்களுக்காக இரண்டு அறிக்கைகளை தயாரித்து தேவையான மருந்துகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வருடத்திற்கு நாட்டுக்கு தேவையான மருந்துகள் தொடர்பில் அமைச்சில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இத்தகைய பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் போது உள்ளூரில் உற்பத்தி செய்யும் மருந்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கொள்வனவு செய்யப்படும் மருந்துகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சில மருந்துகள் நாட்டில் பாரியளவில் உற்பத்தி செய்யப்படுவதுடன் மக்கள் பல்வேறு வர்த்தக பெயர்களிலுள்ள மருந்துகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்

Related Articles

Latest Articles