ஆலய வளாகத்தில் பாம்பு தீண்டி இளைஞன் உயிரிழப்பு!
ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி – கல்மடு நகரில் இடம்பெற்றுள்ளது.
இதில், அதே இடத்தைச் சேர்ந்த சிறீகாந்தன் கிருசிகன் (வயது 23) என்பவரே உயிரிழந்தார்.
பாம்பு தீண்டிய இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இளைஞரின் சடலம் உடற்கூராய்வுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
