ஆளுங்கட்சியினருக்கு பஸில் விடுத்துள்ள பணிப்புரை

மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அத்துடன், அரசில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரத்துக்கு உரிய வகையில் பதிலடி கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் இறுதி தருவாயில், மே மாதத்துக்கு பிறகு தேர்தல் ஒன்று இடம்பெறும். எனவே, அதற்கான ஏற்பாடுகள் பற்றி விழிப்பாகவே இருங்கள் என பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் ஜுன் மாதம் உள்ளாட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles