ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளார்.
ஜுன் மாதத்துக்கான 2ஆம் வார நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் ஆரம்பமாகின்றது.
எனவே, நாடாளுமன்ற அமர்வு நாட்களில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள், 21 ஆவது திருத்தச்சட்டமூலம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
ஜனாதிபதி தலைமையில் நாளை மாலை அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
