இடைக்கால அரசின் பிரதமர் டலஸ்? மஹிந்தவை பதவி விலக கூறியதன் காரணம் என்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் – என கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

” தேசிய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக்கொண்டு, அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி – அவற்றின் ஒத்துழைப்பை பெறக்கூடிய புதிய சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிக்க, நாடாளுமன்றத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இதற்காக தற்போதைய அமைச்சரவை வழிவிட்டால், அந்த தியாகத்துக்கு இந்நாட்டு வரலாற்றில் உரிய கௌரவம் கிட்டும்.” – எனவும் மேற்படி கடிதத்தில் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் – மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை, குறைந்தபட்சம் ஒரு வருடகாலத்துக்காவது நியமித்து, சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் டலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்ற பிறகு அவரை விட்டு பலர் சென்றிருந்தாலும், டலஸ் அழகப்பெரும் ராஜபக்சவுக்கு பக்கபலமாக இருந்தார்.
மஹிந்த சூறாவளியை உருவாக்கி, குறுகிய காலப்பகுதியில் மொட்டு கட்சி வெற்றிநடை போடவும் பெரும் பங்களிப்பு செய்தார்.
எனினும், கடந்த பொதுத்தேர்தலின்போது ராஜபக்சக்களின் நகர்வுகள் குறித்து டலஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.

ராஜபக்சக்களின் உறவினரான நிபுண ரணவக்கவை, மாத்தறை மாவட்டத்தில் வெற்றிபெற வைப்பதற்காக தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அம்மாவட்டத்தில் 131,010 வாக்குகளைப் பெற்று நிபுண ரணவக்க முதலிடம் பிடித்தார். டலஸ் அழகப்பெரும மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மாத்தறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகூட நிபுண ரணவக்கவுக்கே வழங்கப்பட்டது.
இதனால் அரசுமீது டலஸ் அதிருப்தியிலேயே இருந்தார். அவரை சமாளிக்க அமைச்சு பதவியுடன், அமைச்சரவை பேச்சாளர் பதவியும் கையளிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையிலேயே மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த கடிதத்தை டலஸ் அரச உயர்பீடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசு இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மையும் ஊசலாடுகின்றது. கட்சி தாவிய உறுப்பினர்களை வைத்துக்கொண்டே, சாதாரண பெரும்பான்மையை அரசு தக்க வைத்துக்கொண்டுள்ளது.

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு மொட்டு கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் அரசுக்கான ஆதரவு சரிந்துவருகின்றது.
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமருக்கான பெயர் பட்டியலில், 11 கட்சிகளின் சார்பில் டலஸ் அழகப்பெருமவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். ஆனால் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை நீக்குவதுதான் சிக்கலாக உள்ளது. அதையும் பேசி தீர்க்கலாம் என நம்புகின்றோம் என்று நிமல் சிறிபாலடி சில்வா இன்று தெரிவித்தார்.

ஆர்.சனத்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles