இடைக்கால பட்ஜட் 30 ஆம் திகதி சபையில் முன்வைப்பு!

இந்த வருடத்தின் மீதமான நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 30 ஆம் திகதி நிதி, திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேற்படி இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் செலவினம் உள்ளிட்ட 30 ஆம் இலக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த 9 ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த குறைநிரப்பு பிரேரணையில் 3275 பில்லியன் ரூபா அரச செலவினமாகவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் அந்த குறைநிரப்பு பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2021 நவம்பர் 07 ஆம் திகதி அப்போது நிதியமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க செலவினம் 2796 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த மதிப்பீட்டிற்கு மேலதிகமாக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில்479.4 பில்லியன் அதிகமாகக் காணப்படுகின்றது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த அமைச்சுக்கு 734.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகரித்த நிதியாக பாதுகாப்பு அமைச்சுக்கு 654.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles