இது மாற்றத்துக்கான வருடம்…! மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் அநுர…!!

“ புதியதொரு மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர், அந்த மாற்றத்தை இந்த வருடம் ஏற்படுத்த முடியும் என நம்புகின்றோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று சந்தித்து ஆசிபெற்றார் அநுரகுமார திஸாநாயக்க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்தவும் கலந்துகொண்டிருந்தார்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க,

“ வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்கவேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது, நாட்டு மக்களும் புதியதொரு மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும், எமது எண்ணமும் ஒன்றாக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 18 தடவைகளுக்கு மேல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார், அரச தலைவர்கள் வராத நாடுகளுக்குகூட சென்று உரையாற்றுகின்றார், அதாவது அவர் ஜனாதிபதி பதவியை தற்போது அனுபவிக்க தொடங்கியுள்ளார்.

அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் எனக் கருதுகின்றனர், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அஞ்சுகின்றனர், ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிசபைத் தேர்தலை முதலில் நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles