பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இதொகா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
கொட்டகலை சிஎல்எப் மைதானத்தில் நாளை முற்பகல் 10.30 மணிக்கு விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்று, இதொகா வேட்பாளர்களுக்காக ரணில் விக்கிரமசிங்க பரப்புரை முன்னெடுக்கவுள்ளார்.
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் இதொகா சார்பில் களமிறங்கியுள்ளனர்.
