கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதேவேளை, போட்டி தொடங்குவதற்கு முன்பும் பல்வேறு பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறுவது வழக்கம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதன்பின் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல்வேறு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே, அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. அதேவேளை, 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ் ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் எதிர்ப்பால் அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இடமாற்றம் செய்தால் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது’ என்றார்.










