இந்தியாவின் ‘றோ’தான் கோட்டாவை விரட்டியதாம் – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கண்டுபிடிப்பு!

கோட்டாபய ராஜபக்சவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்குகொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என்று பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார.

‘அறகலயவின்’ பின்னணியில் இந்தியாவின் றோவும், அமெரிக்காவின் சிஐஏவுமே செயற்பட்டன எனவும் அவர் கூறினார்.

சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளைகளில் இந்தியா உதவி இருந்தாலும், அதன்மூலம் தனக்கு உபாயமார்க்கமாக தேவையானவற்றை அந்நாடு பெற்றுக்கொண்டுள்ளது என்பதே உண்மை.
தமது நாட்டு இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இந்தியா பயன்படுத்திக்கொண்டது. பண்டைய காலத்தில் 17 தடவைகள் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த 17 சந்தர்ப்பங்களிலும் போரிட்டு இழந்ததை இலங்கையர்கள் மீளப்பெற்றுள்ளனர். எனவே இலங்கையை காலனித்துவ நாடாக வைத்திருப்பது இலகுவான காரியம் அல்ல என்பது இந்தியர்களுக்கு தெரியும்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி வீழ்வதற்கு இந்தியா உதவி வழங்கியது என்பது உறுதி. ஊர் பகுதிகளில் வட்டி வியாபாரிபோல் பொருளாதாரத்தை விழ வைத்தே இந்தியா உதவி செய்தது. கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றிவிட்டு ,ரணிலை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இந்தியா தலையிட்டதற்கான சாட்சிகள் உள்ளன.

இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் செயற்படுகின்றன. ‘குவாட்’ அமைப்பின் தேவைதான் கோட்டாவை விரட்டிவிட்டு, ரணிலை கொண்டுவருவது. அதனைதான் இந்தியா செயற்படுத்தியுள்ளது. தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு ரணில்தான் பொருத்தமான நபர் என்பது இந்தியாவுக்கு தெரியும். ரணிலை இந்தியா விரும்பவில்லை என்பதெல்லாம் இந்த கேமின் ஒரு அங்கமாகும். இலங்கையில் இடம்பெற்ற ‘அறகலய’கூட இந்திய, அமெரிக்காவின் கூட்டு நிகழ்ச்சி நிரலாகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles