“இந்தியாவை தோற்கடித்தால் சிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன்..” என பாகிஸ்தான் நடிகை சவால் விடுத்து உள்ளார்.
பங்களாதேஷ், இந்திய அணிகள் நேற்று மோதியபோது, பாகிஸ்தான் இரசிகர் தொடர்ந்து டுவீட் செய்து, இந்தியா போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பினர்.
நவம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை, 20 வர் உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா சிம்பாப்வேயுடன் மோதுகிறது.
இந்தப் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இப்போது, பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி வரவிருக்கும் போட்டி குறித்து டுவீட் செய்துள்ளார்,
அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் “அடுத்த போட்டியில் சிம்பாப்வே அணி இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என டுவிட் செய்து உள்ளார்.










