இந்தியாவை வீழ்த்தியதால் நியூசிலாந்துக்கு அடித்த அதிஷ்டம்…

டேரில் மிட்செல்- தலைவர் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிரடியாக ஆடிய மிட்செல் 49 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் 31 பந்துகளில் 33 ரன்கள் (நாட் அவுட்), கான்வே 2 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, நியூசிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த வெற்றியின்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles