அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாகவே துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவரின் முதல் வருகையாகும்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘ நான் இந்தோ-பசிபிக் பகுதிக்கு பல நாடுகள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்குச் செல்வேன்.” என்று கூறியுள்ளார்.