இந்தியா முட்டை தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுடியுள்ளனர்.

உரிய முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாததால், விநியோகம் செய்யப்படும் சில முட்டைகள் தற்போது பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தரவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த அவர், இந்திய முட்டைகள் பழுதடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்தார்.

Related Articles

Latest Articles