இந்தியா – ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பிரதமர் மோடியை ரஷ்ய ஜனாதிபதி புடின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம், மனித வளம், உரம், கப்பல் கட்டுமானம் தொடர்பாக 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார்.

அன்றிரவு ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்தார். அப்போது ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு நேற்று காலை 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடின், காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, இந்தியா – ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் 2030 தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் இணைந்து கூட்டு தயாரிப்புகளில் ஈடுபட உள்ளன.

Related Articles

Latest Articles