சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றார்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இந்தப் போட்டி கேரளா – திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
எவ்வாறாயினும், இந்திய அணி ஏற்கனவே 2 – 0 தொடரை வென்றுள்ளது.
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? அல்லது இந்திய அணி தொடரை முழுமையான வெல்லுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
