இந்திய தூதுவரை சந்தித்தார் ஜீவன்!

இந்திய தூதுவரை சந்தித்தார் ஜீவன்!

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை(12) நடைபெற்ற குறித்த இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

‘ இந்திய- இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய தூதுவருடன் கலந்துரையாடினேன்.” – என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

‘ மேலும் எமது சமூகத்திற்கான நீண்டகாலமான நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்குகளுக்கு இந்தியாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டேன்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles