இந்தோனேசியாவில் படகு விபத்து – 19 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் Sulawesi தீவு பகுதியில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19 பேர் காணாமல்போயுள்ளனர்.

Lanto கிராமத்திலிருந்து இருந்து Lagii கிராமத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 20 பேர் மட்டுமே பயணிக்க கூடிய மரப்படகில் 40 பேர்வரை பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது. காணாமல்போனவர்களை தேடும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா சுமார் 17 ஆயிரம் தீவுகளைக் கொண்ட நாடாகும். அங்கு படகு போக்குவரத்து பிரதானமாக இடம்பெறுகின்றது. பாதுகாப்பற்ற படகு பயணத்தால் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுகின்றன.

Related Articles

Latest Articles