இந்த மூன்று பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன?

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அடுத்த சில தினங்களில் அதிகரிக்கப்படும் என்று நுகர்வோர் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலைகள் தொடர்பான குழுவின் ஆய்வுக்கு அமைய வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் இந்த விலைகள் அதிகரிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பினால் இந்த மூன்று பொருட்களினதும் விலைகளை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் 6 மாதங்களாக கோரிக்கை விடுத்ததாகவும், அது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலைகள் தொடர்பான குழுவினால் உரிய மதிப்பீடுகள் செய்யப்பட்டு வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களும் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கு சந்தையில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சீமெந்து பைகள் அதிக விலைகள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

Related Articles

Latest Articles