இன்னும் ஓயவில்லை விலை உயர்வு! உள்நாட்டு பால்மா விலையும் எகிறியது!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ‘ஐலண்ட்’ பால்மாவின் விலையும் எகிறியுள்ளது.

இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலைப்பட்டியலின் பிரகாரம் 400 கிராம் பால்மா 470 ரூபாவுக்கும், ஒரு கிலோ பால்மா ஆயிரத்து 170 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும்.

Related Articles

Latest Articles