உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் டில்லியில் இன்று மோதுகின்றன.
இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டன. எனினும், 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் முயற்சிக்கும்.
