நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு, மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும்.
நுவரெலியா, அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும்.
அதேவேளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகலை, இரத்தினபுரி, மாத்தளை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.










