கொழும்பின் பல பகுதிகளில் இன்று (4) பிற்பகல் 2 மணி முதல் 24 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 1, 2, 3 மற்றும் 4, கொழும்பு 7, 8, 9, 10 மற்றும் 11, கடுவெல, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் குழாயின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக நீர்வள சபை தெரிவித்துள்ளது.