இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு: வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று  கெஸ்பேவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம்  குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கெஸ்பேவ – ஹொன்னந்தர – சர்வோதய மாவத்தை பகுதியைச் சேர்ந்த அகிலா  போனிபஸ் என்பவர் கடந்த 8ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில், குழந்தைகள் குறைமாத சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கடந்த 19ஆம் திகதி ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக அக்குழந்தை உயிரிழந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் மற்றைய குழந்தைக்கு தாய்,  பாலூட்ட சென்ற போது  (23) அந்த குழந்தையும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர், கொஹுவல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  ஆராய குழு வொன்று நியமிக்கப்படும் என  களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்தார்.

Related Articles

Latest Articles