இரண்டரை ஆண்டுகளின் பின் நியூசிலாந்து எல்லை திறப்பு

நியூசிலந்து, பயணிகளுக்கு அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது.

கொவிட்–19 வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது தனது எல்லைகளை மூடியது.

அதன் பின்னர் வைரஸ் பரவல் குறைய ஆரம்பித்ததும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அது எல்லையைத் திறந்துவிட்டது. இருப்பினும் விசா அனுமதி தேவைப்படுவோர், மாணவர் விசா அனுமதியில் இருப்போர் ஆகியோர் நாட்டுக்குள் நுழைய முடியாமல் இருந்தது.

கடந்த ஞாயிறு இரவு முதல் அவர்களுக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

மேலும் சொகுசுக் கப்பல்கள், உல்லாசப் பாய்மரப் படகுகள் ஆகியவை நியூசிலாந்துக் கரைகளை அடையவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துப் பொருளாதாரத்தின் வளத்துக்கு முக்கிய பங்களிப்பவர்கள் வெளிநாட்டு மாணவர்கள்.

எல்லைகள் திறந்துவிட்டதால் இனி பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் சேருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பல எல்லைகளை முழுமையாகத் திறந்த பின்னரும் நியூசிலாந்து பொறுமையாக, படிப்படியாகவே அதைச் செய்தது.

Related Articles

Latest Articles