டிஜிட்டல் மயமான இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) Gamata Sanniwedanaya முன்முயற்சியை ஆதரித்து, எயார்டெல் லங்கா, இரத்தினபுரி வெலேகும்புரவில் மற்றுமொரு கோபுரத்தை நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வதாக அறிவித்தது.
புதிதாக செயற்படுத்தப்பட்ட 4G கோபுரம் முதன்முறையாக சரியான இயக்கம், மேம்படுத்தப்பட்ட வேகம், உட்புற கவரேஜ் மற்றும் தாமதத்தை குறைத்தல் ஆகியவற்றை செயல்படுத்தும்.
இது பிராந்தியத்தில் உள்ள 33,737 மொத்த மக்கள்தொகைக்கு உகந்த, நம்பகமான 4G அனுபவத்தை வழங்குவதோடு, எயார்டெலின் பாரியளவிலான மேம்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த 4G நெட்வொர்க் கவரேஜையும் வழங்குகிறது.