மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24 மேலதிக வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரத்தோட்டை பிரதேச சபை தலைவர் யு.ஜி.பி. குமார சேனாவினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (9) சபையில் முன்வைக்கப்பட்டது
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஜேவிபி கட்சி உறுப்பினர் ஒருவரை தவிர அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் 24 உறுப்பினர்கள் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டன. அடுத்த வருடத்திற்கான மொத்த வருமானமாக 94,386,180.00 ரூபாவாகவும் மொத்த செலவு 94,385,480.00 ரூபாவாகும் என சபை தலைவரால் சபையில் இதன்போது அறிவிக்கப்பட்டது.










