“சீருடையில் வந்த இராணுவத்தினர்மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆயுதத்துடன் அந்த இடத்துக்கு இராணுவத்தினர் வந்தது தவறு. அவர்கள் வந்தார்களா அல்லது யாராவது அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.
எனினும், சீருடையில் இருக்கும் இராணுவத்தினரை மக்கள் முன்னிலையில் பொலிஸார் தாக்கியது தவறு. அதனை கண்டிக்கின்றேன். இராணுவத்தினர் பொலிஸாரை தாக்கி இருந்தால்கூட, தாக்குதலுக்கு இலக்கானவர் பக்கம்தான் நான் நின்றிருப்பேன்.” – என்றார்.