” நாடளாவிய ரீதியில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தேசிய பொருளாதாரத்திற்கும் இழப்பு ஏற்பட்டது. நீர் விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டது. நோயாளிகள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராட வேண்டிய நிலை போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
இது தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். உண்மை நிலைமை அறிவிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
” இந்நாட்டிற்கு உகந்த மின்சார கட்டமைப்பு தேவை. மின் சபை மறுசீரமைப்பின் போது மின் சபையை தனியாருக்கு மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் பேரழிவு நிலை உருவாகலாம்.
மின் தடையால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து துல்லியமான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும் ,மீண்டும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் நாட்டுக்கு ஏற்படக் கூடாது.” எனவும் சஜித் குறிப்பிட்டார்.










