இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மாமா சுட்டுக்கொலை! காலியில் பயங்கரம்!! நடந்தது என்ன?

இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மாமனார் காலியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

காலி நகரில் பிரபல வர்த்தகர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் லலித் வசந்த மெண்டிஸை (வயது – 61) இலக்கு வைத்து அவர் பயணித்த கார்மீது நேற்று முன்தினம் இரவு, மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

காலி நகரில் இருந்து தமது வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருக்கையிலேயே காலி டிக்சன் வீதி பகுதியில் வைத்து அவர்மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ரி – 56 ரக துப்பாக்கிமூலமே சூடு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்கவின் மனைவியின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவர், நிழல் உலக தாதாவும், போதைப்பொருள் கடத்தல் காரருமான ரத்கம விதுரவின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

ரத்கம விதுரவுக்கும், கொஸ்கம சுஜீவுக்கும் இடையில் நீண்டகாலமாக பாதாள குழு மோதல் இடம்பெற்றுவருகின்றது.

ரத்கம விதுரவின் தரப்பில் இருந்து அண்மையில் கொல்கம சுஜீவின் உறவினர் ஒருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் இரு தரப்பில் இருந்தும் அவ்வப்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன.

காலியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் கொஸ்கம சுஜீவ தரப்பால் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Latest Articles