மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தோட்ட நிர்வாகம், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு அறிவித்ததை அடுத்து, நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
வன பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள பேராதெனிய மிருக வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர்