இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவைக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி வாய்ப்பும் நழுவியுள்ளது.










