இலங்கைத் தூதுவரை ஏற்க மறுக்கிறதா இந்தியா?

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனத்தை அந்நாடு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை இலங்கை மறுத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதன்போது இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமினத்தை அந்நாடு நிராகரித்துள்ளதாகவும், எனவே, இது தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்யுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

” அமைச்சரவைக்கு அவ்வாறானதொரு அறிவிப்பு விடுக்கப்படவில்லை. எனக்கு தெரிந்தவரை மிலிந்த மொரகொடவே இந்தியா செல்லவுள்ளார்” – என்றார்.

Related Articles

Latest Articles