இலங்கையரை கொன்றவர்களுக்கு மரண தண்டனை – மனோ வலியுறுத்து

பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாகக் கொலைசெய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

” சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து, கொலை செய்த அடிப்படைவாத கும்பலுக்கு, குறிப்பிட்ட காலவரைக்குள், அதிவேக சட்ட நடவடிக்கை மூலம், உச்சபட்ச மரண தண்டனை வழங்கப்படுவதைத் தவிர எதுவும் எங்களை ஆறுதல் படுத்தாது மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் இம்ரான் கான்.” – எனவும் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles