இலங்கையின் முயற்சி நம்பிக்கையளிக்கிறது – ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்த சாதகமாக இருப்பதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (11) சந்தித்தபோது ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles