இலங்கையின் 5ஆவது மதம் கிரிக்கெட் – விளையாட்டில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமில்லை! மனோ

” இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் “வெட்டுகளை” நிறுத்துங்கள். கிரிகட் இந்நாட்டின் ஐந்தாம் மதம். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய மனோ கணேசன் கூறியவை வருமாறு,

” யாழ் பெற்றிக்ஸ், மன்னார் சேவியர்ஸ் ஆகிய கல்லூரி அணிகள், எனது தொகுதி கொழும்புக்கு வந்து, 20 வயதிற்கு உட்பட்ட தேசிய பாடசாலை கால்பந்து வெற்றிக்கிண்ண இறுதி போட்டியில் விளையாடுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு தருணம். கால்பந்தில் தமிழ் பிள்ளைகளுக்கு இருக்க கூடிய திறமைகளை பாருங்கள்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீங்கள் இளைஞர். புதிதாக சிந்திக்க கூடியவர். கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாவது மதம். அதைக்கொண்டு அரசியல்வாதிகள் நிலைநாட்ட தவறிய இன ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள்.

இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் “வெட்டுகளை” நிறுத்துங்கள். இங்கே பிரச்சினை என்னவென்றால், இலங்கையின் ஈழத்தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு திறமை இருந்தும் இடமளிக்கப்படுவதில்லை என்பதுவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள அரச கட்டமைப்பு வளங்களை வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் வழங்குவதில்லை என்பதுவும்தான். இதற்கு என்ன காரணம்? ஒளிவு மறைவு இன்றி அனைத்தும் சிங்கள-பெளத்த மயம் என்ற பெருந்தேசியவாதம்தானே.

இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா நாடுகளிலும் இனவாதம் முழுக்க இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றையும் மீறி இந்நாட்டு அணிகளில் இன, மத, நிற வாதங்களை மீறி பன்மைதன்மை இருப்பதை பார்க்கிறோம். உலக கிண்ண கால்பந்து போட்டிகளின், “வெள்ளைக்கார” நாட்டு அணிகளில் “கறுப்பின” வீரர்கள் கணிசமாக இடம் பெறுவதை பாருங்கள். இங்கே இது அறவே இல்லை. அதை பார்த்தாவது திருந்துங்கள்.

ஐயாம் எ ஸ்போர்ட்ஸ்மேன். நான் ஒரு விளையாட்டு ஆர்வலன். விளையாடும் வீரன். இந்த நாட்களில் இரவுகள் முழுக்க உலக கிண்ண கால்பந்து ஆட்டங்களை பார்க்கிறேன். இலங்கையில் கால்பந்து சம்மேளனம் செயற்படவில்லை. இன்று சம்மேளனம் இடை நிறுத்தம் ஆகி உள்ளது. முன்னாள் தலைவரின் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு ஒரு அறிக்கை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை தூர தள்ளி வைத்து விட்டு, தைரியமாக முடிவுகளை எடுத்து, புதிய தேர்தல்களை நடத்தி, புதிய கால்பந்து சம்மேளன செயற்குழு அமைத்து செயற்படுங்கள்.” – என்றார் மனோ.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles