இலங்கையில் நேற்று மாத்திரம் 5,333 பீசீஆர் பரிசோதனைகள் – 10 ஆயிரம் பேர் தனிமையில்….

இலங்கையில் நேற்று மாத்திரம் 5 ஆயிரத்து 333 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பரிசோதனை முடிவுகள் இன்றும் நாளையும் வெளிவரும்.

அத்துடன், 89 தனிமைப்படுத்தல் முகாம்களில் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட ஆறு பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவைமீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் சுமார் 130 பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை, கடவத்த மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Related Articles

Latest Articles