இலங்கையில் வருடாந்த இறப்பு வீதம் அதிகரிப்பு

நாட்டில் இறப்பு வீதம் படிப்படியாக அதிகரித்து வருவதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, அந்த திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2012ஆம் ஆண்டு ஜூலை முதல் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 626ஆக காணப்பட்டது. எனினும், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இலங்கையில் நிகழ்ந்துள்ள இறப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 600 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles