சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள ஆபத்தான யோசனைகளை அரசு ஏற்றுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன,
” சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள்
பயங்கரமானவை என சுனில் ஹந்துனெத்தி குறிப்பிடுகின்றார். அது பொய்யாகும்.
சர்வதேச நாணய நிதியத்தில் பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஒரு நாடு விழும்போது, அதற்கு உதவி செய்யவே அந்நிறுவனம் உள்ளது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன” – என்று குறிப்பிட்டார்.
