இலங்கைவந்த தமிழக சிற்பி நுவரெலியாவில் திடீர் மரணம்

நுவரெலியா ஹய்பொரஸ்ட் இல.03 பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்பி பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்து (09) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நன்னைலன் திருவூர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்கிரிசாமி புருசோத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹய்பொரஸ்ட் இல.03 பிரிவு நகரில் பழமையான ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய புனரமைப்புக்கு சிற்பி பணிக்காக தமிழ் நாட்டிலிருந்து இவரும் இன்னொருவரும் கடந்த பெப்ரவரி மாதம் வருகை தந்துள்ளார். இவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்து சிலை வடிவமைப்பு பணிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (09.12.2022) காலை இவர்கள் தமது வழமையான பணியை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது மயக்கம் வருவதாகவும் குடிக்க தண்ணீர் தரும்படியும் உயிரிழந்தவர் கேட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தண்ணீர் எடுத்துவரும் முன்னர் இவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து ஊர்மக்களின் உதவியுடன் ஹய்பொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவரை பரிசோதித்த வைத்தியர் இவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

உயிரிழந்த இந்திய பிரஜையின் உடல் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles