இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் சூழ்ச்சி – வெளியான பகீர் தகவல்

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்றின் சூழ்ச்சி இருந்தது. இது உட்பட அனைத்து தகவல்களையும் இன்னும் இரு நாட்களுக்குள் வெளிப்படுத்துவேன் – என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்றிருந்த இலங்கை அணி நேற்று காலை நாடு திரும்பியது. விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரமோதய விக்கிரமசிங்க கூறியவை வருமாறு,

” எனக்கு இரு நாட்கள் அவகாசம் தாருங்கள், அனைத்தையும் அம்பலப்படுத்துவேன். நாம் சிறப்பாக செயற்படவில்லை. தோல்வி கவலையளிக்கின்றது. இங்கு வீழ்ச்சி ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்களை இரு நாட்களில் வெளிப்படுத்துகின்றேன். தோல்விக்கு நான் பொறுப்பேற்கின்றேன், அதில் இருந்து நழுவவில்லை. சூழ்ச்சி இருந்ததா, வீழ்த்தியது யார் உள்ளிட்ட அனைத்து விடயங்களை பற்றியும் பேசவுள்ளேன். குழுவொன்றின் சூழ்ச்சி இருந்தது. இறுதி நேரத்தில் வீரர்களுக்கு அழுத்தம் இருந்தது.” ” – என்றார்.

Related Articles

Latest Articles