“கச்சத்தீவு அல்ல இலங்கையில் எந்தவொரு பகுதியும் உங்களுக்கு சொந்தம் அல்ல என்பதை விஜய் உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார்.
” தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பதவி கனவில் இருப்பவர்கள் கச்சத்தீவு மற்றும் இலங்கை விவகாரம் தொடர்பில் பல அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர்.
குறிப்பாக நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தளபதி விஜய், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போன்றோர் செய்த வேலையை செய்வதற்கு முற்படுகின்றார்.
விஜய் போன்றவர்கள் கச்சத்தீவுடன் நின்றுவிடப்போவதில்லை. அதன்பிறகு வடக்கில் கைவைக்ககூடும்.
எனவே, 30 வருடகால போரை முடித்த இனம் நாம். சேர, சோழ, பாண்டியர்கள் 17 தடவைகள் நாட்டை ஆக்கமிக்க முற்பட்டும் அதற்கு அடிபணியாத இனம் நாம். இவற்றையெல்லாம் தளபதி விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு சொந்தமான பூமி இங்கு இல்லை என்பதை தளபதி விஜய் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொண்டு அரசியல் நடத்துங்கள் என கனவு முதல்வரிடம் கேட்கின்றோம்- எனவும் உவிந்து விஜேவீர குறிப்பிட்டார்.