இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகின்றது.
தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.
20 ஓவர் போட்டியில் ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 9 ஆட்டத்திலும், இலங்கை 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
