இலங்கை – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட் தொடர் கொரோனா-19 பரவலின் காரணமாக கைவிடப்பட்டது. அதன் பின் இலங்கை மண்ணில் எல். பி. எல். கிரக்கெட் தொடரைத் தவிர எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் கடந்த வருடம் நடைபெறவில்லை.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அவ்வணியில் உள்ள பிரபல வீரர்கள் காயம் காரணமாக அவதியுற்று வருகின்றனர். தென்னாபிரிக்க தொடரின் போது தனஞ்சய டி. சில்வா, கசுன் ராஜித, லஹிரு குமார போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகத் ஆடிவருகிறார். இவருடன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடும் டினேஷ் சந்திமால், காயத்திலிருந்து குணமடைந்துளள அஞ்சலோ மெத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா, நம்பிக்கையுடன் இத்தொடருக்கு முகம் கொடுக்கக் காத்திருக்கும் டிக்வெல்ல ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுசேர்ப்பார்கள் என எதிர்பார்கப்கப்படுகிறது.
முக்கியமாக இவர்களில் இருவர் சிறந்த ஒரு இணைப்பாட்டத்தை கொடுத்தால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

பந்து வீச்சைப் பொறுத்த வரை காலி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமானதால் இலங்கை அணி அநேகமாக சுழல் பந்து வீச்சாளர்களை நம்பியே களமிறங்கும். டில்ருவன் பெரேரா, லாசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன் இவர்களுடன் தென்னாபிரிக்க அணியுடனான இரு டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடிய வனிது ஹசரங்க ஆகிய நால்வரில் மூன்று வீரர்களை ஆடும் பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சில் சகலதுறை வீரர் தசுன் சானக விஷ்வ பெர்னாண்டோ, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார போன்ற வீரர்கள் உத்தேச அணியில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் இவர்களில் இருவரையே களமிறக்கும் வாய்ப்புள்ளது.

இங்கிலாநது அணியைப் பொறுத்தவரையில் கடைசியாக அவர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் இடைநடுவில் கைவிடப்பட்டது.

எனவே டெஸ்ட் சம்பியன் ஷிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் அவ்வணி இலங்கையுடனான இத்தொடரை வென்று முன்னேறிச் செல்லவே எத்தணிக்கும். கடைசியாக இலங்கையுடன 2018ம் ஆண்டு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அவ்வணி முழுமையாகக் கைப்பற்றிது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் எந்த மைதானத்திலும் சிறப்பாகச் செயற்படக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். தலைவர் ஜோ ரூட், கிறிஸ் வோக்கஸ், றொரி பெலன்ஸ், ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

இலங்கை அணியை விட அவர்களின் வேகப்பந்து வீச்சு குழாம் பலம் பொருந்தியது. ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவர்புரோட் அண்மைக் காலமாக எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியாக பந்து வீசி வருகின்றனர். கடந்த வருட நடுப்பகுதியில் முடிவுற்ற மேற்கிந்திய, பாகிஸ்தான் தொடர்களைக் கைப்பற்ற இவர்களின் பந்து வீச்சே முக்கிய காரணமாய் அமைந்தது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இவ்விரு பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது கவனம் தேவை, சுழற்பற்து வீச்சைப் பொறுத்துவரை இலங்கை அணியின் கையே ஓங்கியுள்ளது. என்றாலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஆதில் ரஷீத், ஜக் லீச், மொயின் அலி போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை மண்ணில் பந்து வீசும் போது சிறப்பாகச்செயற்பட்டுள்ளதை கடந்த கால பெறுபேறுகளை பார்த்தால் புரியும். 2018ம் ஆண்டு இங்கிலாந்து அணி 3 – 0 என்று தொடரை வெல்லவும் இச் சுழற் பந்து வீச்சாளர்களே முக்கிய காரணமாய் அமைந்தனர்.

அத்தொடரில் எமது துடுப்பாட்ட வீரர்கள் அநேகமாக இவர்களின் பந்துகளை எதிர்கொள்ளவே சிரமப்பட்டனர். இரு அணிகளில் அண்மைக்காலமாக துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றாலும் எதிர்வுகள் கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் எதிர்மறையான பெறுபேறுகளும் ஏற்படலாம். இத்தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவது இலங்கை அணிக்கு அனுகூலமாக அமையலாம்.

40 வருட வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி 1982ம் ஆண்டு பி. சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இது வரை இரு அணிகளுக்கிடையிலும் 34 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 15 போட்டிகளிலும், இலங்கை அணி 08 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையில் கூடிய ஓட்டங்களாக இலங்கை அணி 2003-12-18ம் திகதி எஸ். எஸ். சி. மைதானத்தில் பெற்ற 8 விக்கெட் இழப்புக்கு 628 ஓட்டங்களும் இங்கிலாந்து அணி 2014ம் ஆண்டு லோட்ஸ் மைதானத்தில் பெற்ற 9 விக்கெட் இழப்புக்கு 515 ஓட்டங்களும் பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக இலங்கை 2001-.03-.15ம் திகதி எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 81 ஓட்டங்களும் இங்கிலாந்து அணி 2007-.12-.18ம் திகதி காலியில் நடைபெற்ற போட்டியில் 81 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்துள்ளது.

தனி நபர் கூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்தன 18-.12-.2007ம் திகதி காலியில் நடைபெற்ற போட்டியொன்றில் 213 ஓட்டங்கள் பெற்றார். இங்கிலாந்து சார்பில் 2011-.05-.26ம் திகதி கார்ட்டிபில நடைபெற்ற போட்டியொன்றில் ஜோ ரூட் பெற்ற 203 ஓட்டங்களே கூடிய ஓட்டங்களாகும். கூடிய மொத்த ஓட்டங்களாக இலங்கை சார்பில் மஹேல ஜயவர்தன 21 போட்டிகளில் 2212 ஓட்டங்களும், இங்கிலாந்து சார்பில் அலெக் ஸ்டூவர்ட்16 போட்டிகளில் 1290 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

ஒரு இன்னிஸில் சிறநத பந்து விச்சுப்பிரதியாக முத்தையா முரளீதரன் 1998-.08-.27ம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளும், இங்கிலாந்து சார்பில் 27-.05-.1991ம் ஆண்டு லோட்சில் நடைபெற்ற பி. சிலேட்டர்ஸ் 70 ஒட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு போட்டியில் கூடிய விக்கெட்டுக்களாக 1998ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் முத்தையா முரளிதரன கைப்பற்றிய 220 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுகளும் இங்கிலாந்து சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன் 2016ம் ஆண்டு லீட்ஸ் மைனத்தில் கைப்பற்றிய 45 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளும் பதிவாபகியுள்ளன.

கூடிய மொத்த விக்கெட் கைப்பற்றியொர் வரிசையில் முத்தையா முதளிதரன் 16 போட்டிகளில் 112 விக்கெட்டுகளும், இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அன்டர்சன் 13 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Paid Ad