இலங்கை – துருக்கி நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த நேரடி விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 05.40 க்கு துருக்கியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 10 வருடங்களாக மாலைதீவின் ஊடாகவே கட்டுநாயக்கவிற்கான விமான சேவையை துருக்கி விமான சேவை நிறுவனம் முன்னெடுத்து வந்தது.

Related Articles

Latest Articles