இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.
பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி விவரம் வருமாறு,
குசல் மெண்டிஷ் ( தலைவர்)
சரித் அசலங்க ( உப தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஸ்க பெர்ணான்டோ
சதீர சமரவிக்கிரம
ஜனித் லியனகே
கமிந்து மெந்திஸ்
சஹான் ஆராச்சிலாகே
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக் ஷன
துனித் வெல்லாலகே
அகில தனஞ்சய
சாமிக்க கருணாரத்ன
டில்ஷான் மதுசங்க
பிரமோத் மதுஷான்
லஹிரு குமார
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி 15ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 18ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
3 போட்டிகளைக்கொண்ட ரி – 20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.