இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார் – சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் இன்று ஆற்றிய உரையில், “இலங்கையில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண்ணெண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன உரங்கள் கிடைப்பதில்லை. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடம் இருந்து அதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. இதனால் `பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்கிற நிலையில் இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆகவே ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியை இலங்கை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

மேலும் ரூ.28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்கவும்; ரூ.15 கோடியில் 500 டன் பால்பவுடர்களை இலங்கை மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது” எனக்கூறினார். இதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க அனுமதி அளிக்க தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles