இல்ல விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!

பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு மீள நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலைகளுக்கு இன்று உரிய வகையில் தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கடும் வெப்பம் நிலவும் நிலையில், எவ்வாறு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் வெளிக்கள செயற்பாடுகளை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு இதற்கு முன்னர் வழிகாட்டல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. எனினும், வெப்பமான காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டுப்போட்டிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles