இஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

– கே.சுந்தரலிங்கம்

டயகமவில் புதைக்கப்பட்டிருந்த இஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இஷாலினியின் சடலம் இரண்டாவது மரண விசாரணைகளுக்காக பேராதனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நீதி மன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று (30 ) காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிசாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி உத்தரவிட்டார்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைவாக பொலிஸ்பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்தியகுழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பான முறையில் அனுப்புமறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

Related Articles

Latest Articles